Thursday, 15 March 2012

தேர் திருவிழா


தேர் திருவிழா

சென்ற வாரம் நமது கோவையில் 2 தேர் திருவிழாக்கள் நடந்தன .கோனியம்மன் மற்றும் காரமடை ஆகிய தேர் ஓட்டங்களை பார்க்கும் அனுபவம் எனக்கு பரவசமாக கழிந்தது .இதை படிக்கும் எத்தனை பேருக்கு இத்தனை நாள் கழித்தும் இவனுக்கு மட்டும் இந்த வாய்ப்பு கிடைக்கிறதே என வயிதெரிச்சலாக இருக்கும் என்று தெரியவில்லை .ஆனால் உங்களில் பலருக்கு தேர் இழுக்கும் அனுபவம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை அதிலும் SSV போன்ற சாத்விகமான பள்ளியில் படித்த நமக்கு அந்த கூட்டத்தில் அடித்து பிடித்து தேர் இழுக்கும் வாய்ப்பை பெற்றிருக்க முடியாது !!!
         ஆனால் எனக்கு 1998 வருடம் கோனியம்மன் தேர் இழுக்கும் அனுபவம் கிடைத்தது . காரணம் கோவை குண்டு வெடிப்பு . ஆம் அந்த வருடம் கோவையில் குண்டு வெடித்த 10 நாட்களில் கோனியம்மன் தேர் திருவிழா .மீண்டும் குண்டு வெடிக்கும் என்று புரளி ஆதலால் கூட்டம் வரவே இல்லை . ஆனால் நான் ராஜ வீதி சென்று தேருக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன் .தேர் கிளம்ப தயாராகும்பொழுது ஒரு போலீஸ்காரர் என்னிடம் தேர் இழுக்கிறையா என்று கேட்க உடனே சரி என்று நான் ஓடிச்சென்று வடம் பிடித்தேன் .

சுமார் 200 பேர் தேரை இழுக்க அந்த பிரண்மாண்டமான தேர் முன்னால் அசைந்து அசைந்து வந்த காட்சியும் தேர் ஊர்ந்து வருகின்ற அதிர்வும் அந்த வடக்கயிறு மற்றும் சங்கிலி மூலம் கிடைக்க கூடிய ஜிவ் என்ற பரவச உணர்வை எப்படி நான் சொல்வது என்று தெரியவில்லை .ஆனாலும் படிக்கும் நீங்கள் நெருக்கமாக உணர வேண்டும் என்பதால் " நாம் சைக்கிள் ஓட்டும் முயற்சியில் முதல் முதலாக balance கிடைத்தவுடன் ஒரு ஆனந்தமான உணர்வு " வருமே அதற்க்கு ஈடான ஒரு மகிழ்ச்சியில் திளைத்தேன் .

பிகு : எழுத்தாளர் சுஜாதா நாம் சைக்கிள் ஓட்டும் முயற்சியில் முதல் முதலாக balance கிடைத்தவுடன் வரக்கூடிய அந்த உணர்வை நமது முதல் முத்தத்தின் அனுபவத்திற்கு இணையானது என்று எழுதியிருக்கிறார் . உண்மைதான் .............

No comments:

Post a Comment